கோலாலம்பூர், ஜூலை 6-
இந்திய சமுதாயத்தின் வாக்கை பெற்றுக்கொண்டு நம் சமுதாயத்தை மாய உலகத்தில் வைத்துக் கொண்டிருக்கும் பிரதமரரும் பக்காத்தான் ஹாராப்பான் தலைவருமான அன்வாருக்கு இந்திய சமுதாயம் பாடம் புகட்ட வேண்டும் என எம் .ஏ .பி கட்சியின் தலைவரான பொன். வேதமூர்த்தி தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்தின் மேம்பாடு தொடர்பான எந்த திட்டத்தை கொண்டுச் சென்றாலும் அதற்கு அன்வார் கொடுக்கும் ஒரே பதில் இது இன ரீதியான திட்டம் என அதை ஒதுக்கி வைத்து விடுவார்.
அது மட்டும் அல்ல ஆலய விவகாரத்தில் குழந்தையையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் வேலையை அன்வார் செய்து வருகிறார். இதை அவர் செய்தது அரசியலுக்காக.. இவரது வலையில் இந்திய சமுதாயம் விழுந்து விட கூடாது, அம்னோ பாஸ் பெர்சத்து போன்ற கட்சிகள் அன்வார் விரித்த வலையில் சிக்க வேண்டாம் என நான் கருத்தும் தெரிவித்தேன் கடிதமும் அனுப்புனேன்.
அதுமட்டுமின்றி அவர் ஆட்சி காலத்தில் பயன் படுத்திய சில வார்த்தைகள் இந்தியச் சமுதாயத்தை காயமும் படுத்தியது.
ஆனால் நம் மக்கள் தெளிவாக சில கருத்துகளை அமைதியாக கொடுத்தனர். எல்லா வினைக்கும் எதிர் வினையாக 16 ஆவது பொது தேர்தலில் விடை கிடைக்கும், பதில் கொடுப்போம் என மக்கள் தெரிவித்தனர்.
அந்த வகையில் இந்திய மக்கள் ஜொகூர் தேர்தலில்" ASALKAN BUKAN PH " என்ற நிலைப்பாட்டில் PN அல்லது BN கட்சிக்கு ஆதரவு கொடுத்து அன்வாருக்கு பாடம் புகட்ட வேண்டும் என பொன் வேதமூர்த்தி தெரிவித்தார்.
அதே போல் இந்திய மக்கள் வரும் பொது தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பானை அடியோடு புறக்கணித்து இந்திய சமுதாயத்திற்கு ஆதரவும் கொடுக்க தெரியும், எங்களை துச்சமாக நினைத்தால் தூக்கி எறியவும் தெரியும் என்பதை அன்வாருக்கும் பாக்காத்தான் ஹாராப்பானுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என பொன் வேதமூர்த்தி தெரிவித்தார்.
தொடங்கட்டும் முழக்கம் " ASALKAN BUKAN PH " என்றார் அவர்.
செய்தி : வெற்றி விக்டர் - காளிதாசன் இளங்கோவன்
0 Comments