நாமக்கல், ஜூலை 6–
நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில் முதன்மை விருந்தினராக மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் கலந்துகொண்டதுடன் கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா விருதையும் பெற்றுக் கொண்டார்.
விருதைப் பெற்ற பின்னர் அவர், கவியரசு கண்ணதாசனின் இலக்கியப் பங்களிப்புகள், தமிழ்மொழி வளர்ச்சியில் அவர் ஆற்றிய அரும்பணிகள் மற்றும் அவரது படைப்புகளின் காலத்தால் அழியாத சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.
மேலும், விருதுக்கான ஏற்புரையையும் நிகழ்த்தி, இந்த உயரிய அங்கீகாரத்தை வழங்கிய விழா ஏற்பாட்டாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் முனைவர் அரசு பரமேஸ்வரன், திரு. பசுமை சத்தியமூர்த்தி, மருத்துவர் குழந்தைவேலு, திரு. காந்தி கண்ணதாசன், திரு. பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் திரு. வி.பி. குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
0 Comments