loader
கொடூரமான முறையில் கொலைச் செய்யப்பட்ட என் மகனின் மரணத்திற்கு நீதி   வேண்டும் ! தாயார் தேவி  வேண்டுகோள்

கொடூரமான முறையில் கொலைச் செய்யப்பட்ட என் மகனின் மரணத்திற்கு நீதி வேண்டும் ! தாயார் தேவி வேண்டுகோள்

கூலாய் ஜெயா, ஜூலை 2-

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட என் மகன் அருண்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தாயார் தேவி உருக்கத்துடன் தெரிவித்தார்.

21 வயதான அருண்குமார் ஒரு அமைதியான இளைஞர். எப்போதும் தன் குடும்பத்திற்குத்தான் முதலிடம் கொடுப்பார், அவரது மரணம்  அவரின் உயிரைப் பறித்தது மட்டுமல்லாமல், எங்கள் அனைவரின் கனவுகளையும் ஒன்றாகச் சிதைத்துவிட்டது.

கடந்த மே 21ஆம் தேதி பெக்கான் நெனாஸில் உள்ள உணவகத்தின் முன்பு நடந்த திட்டமிடப்பட்டதாக நம்பப்படும் ஒரு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத 52 வயதான கே. தேவி, தனது மகனின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு உறவினர்கள் எங்களுக்குத் தெரிவித்தபோதுதான் இந்தச் சம்பவம் பற்றித் தெரியவந்தது.

சம்பவத்திற்கு முன்பு, அவனிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. மாறாக, அவர் வழக்கம் போல் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்,

நாங்கள் வங்கிக்குச் சென்றுவிட்டு,  வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது என்று அவர் கூறினார்.

அருண்குமார் கொலை வழக்கில் ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், இன்னும் சிலர் பிடிபடாமல் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

அவர்களையும் கைது செய்து நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என போலிசாரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

அவர்கள் சுதந்திரமாக இருக்கும் வரை, எங்கள் வாழ்க்கை அமைதியாக இருக்காது என்று அவர் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News