கோலாலம்பூர், ஜுன் 30-
பி.பி.ஆர் வீடு கிடைக்க கோலாலம்பூர் மாநகர மன்றத்திடம் விண்ணப்பம் செய்த நிலையில் அவருக்கு கடந்த ஜூன் 15ஆம் திகதி இந்தான் பைடுரியில் பி.பி.ஆர் வாடகை வீடு மாதம் 124 வெள்ளிக்கு கிடைத்துள்ளது.
ஆனால் 14 நாட்களுக்குள் அவர் வீட்டுக்கான முன் பணத்தை (செலுத்தி) வீட்டு சாவி எடுக்க வேண்டும் என மாநகர மன்றத்தின் கடிதத்தில் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி நந்தகுமார் மாநகர மன்றத்தின் கடிதத்திற்கு 14 நாட்களில் பதில் கொடுக்காத நிலையில் அவருக்கு கொடுக்க பட்ட வாய்ப்பு பறிக்கப்பட்டு மற்ற விண்ணப்பதாரர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
சாதாரண தொழிலாளியான பி 40 பிரிவை சேர்ந்த நந்தகுமாரால் மாத இறுதியான இத்தருணத்தில் அந்த பணத்தை திரட்ட இயலாத நிலையில் தவித்த போது, அவர் ம.இ.கா தேசிய தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஏ. கே ராமலிங்கத்தை நேற்று சந்தித்தார்.
மாதம் முடிய இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலை நிலவரத்தை டத்தோ ராமலிங்கத்திடம் அவர் விளக்ககினார். உடனடியாக அவருக்கு தேவையான முன் பணத்தை டத்தோ ராமலிங்கம் வழங்கி அந்த வீடு அவருக்கு கிடைக்க உதவி செய்தார்.
தவித்த நேரத்தில் டத்தோ ஏ.கே ராமலிங்கத்தை சந்தித்தேன். ம.இ.கா எனக்கு கை கொடுத்தது என நந்தகுமார் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
0 Comments