கோலாலம்பூர், ஜூன் 26 –
25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள மலேசிய வீரர்கள் முழு பலத்துடன் போட்டியிட்டு, அனைத்துலக அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் சாதனை படைக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி வலியுறுத்தினார்.
25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், இப்போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த 350 அனைத்துலக வீரர்கள் கலந்து கொண்டிருப்பது போட்டியின் உயரிய தரத்தையும் சிறப்பையும் வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
மேலும், போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்ளூர் வீரர்களையும் அவர் வரவேற்று, விளையாட்டு மூலம் நாடுகளுக்கிடையிலான நட்புறவும் ஒற்றுமையும் மேலும் வலுப்பெற வாழ்த்துத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, 25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
0 Comments