loader
25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் கோலாலம்பூரில் கோலாகலம்: 1,850 கராத்தே வீரர்கள் பங்கேற்பு!  துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தொடக்கி வைத்தார்!

25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் கோலாலம்பூரில் கோலாகலம்: 1,850 கராத்தே வீரர்கள் பங்கேற்பு! துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தொடக்கி வைத்தார்!

கோலாலம்பூர்,ஜூன் 26-
தலைநகரிலுள்ள தித்திவாங்சா மண்டபத்தில் 25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் தொடக்க விழா இன்று நடைப்பெற்ற வேளையில் அதனை துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் மொத்தம் 1,850 கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 350 சர்வதேச வீரர்களும், 1,500 உள்ளூர் வீரர்களும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பல்வேறு வயது மற்றும் திறன் பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டி, சர்வதேச நட்புறவை வலுப்படுத்துவதோடு, கராத்தே விளையாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கியது.

புத்ராஜெயா கராத்தே சங்கத் தலைவர் தியாகு பொன்னையா  தலைமை உரையாற்றியபோது இத்தகவலை வழங்கினார்.

0 Comments

leave a reply

Recent News