செனாவாங், மே 24-
மலேசிய மக்கள் சக்தி இன்று செனாவாங்கில் நடத்திய பச்சபா கருத்தரங்கிற்கு மஇகா முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.
இந்த கருத்தரங்கு, தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் அதற்கான தயாரிப்புகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முக்கிய துணையாக அமைந்ததாக அவர் கூறினார்.
தேர்தல் காலத்தில் மஇகாவிற்கு உதவ தாங்கள் தயாராக இருப்பதாகவும், அரசியல் பயணத்தில் இதற்கு முன்பு கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தாலும், இந்திய சமுதாயத்தின் நலனை முன்னிறுத்தி தற்போது ஒன்றிணைந்து செயல்பட தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இன்னும் உறுதியாகாதபோதிலும், தேவையான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை தேசிய முன்னணியிலிருந்து எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை. தேர்தலில் நாங்கள் போட்டியிடவுள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு விட்டோம். போருக்கும் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஆட்சிக்காலம் இந்திய சமுதாயத்திற்கு பொற்காலமாக இருந்ததை மக்கள் உணர்ந்துவிட்டதாகவும், தற்போதைய சூழ்நிலையில் ஒட்டுமொத்த மலேசியர்களும் அவரது மீள்வரவை எதிர்பார்த்து வருவதாகவும் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறினார்.
0 Comments