சிரம்பான், மே 22-
நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் கீழ் வியாபாரிகளுக்கு வெ.5.2 மில்லியன் கடன் உதவி பெற்றுத் தரப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திருநாவுகரசு தெரிவித்தார்.
இந்திய இளைய தொழில்முனைவர்கள் தொழிலியல் சங்கங்களில் இணைந்து செயல்பட்டால்தான் இதுபோன்ற அரசாங்க உதவிகளை எளிதில் பெற முடியும் என அவர் சொன்னார்.
மேலும் மித்ராவின் கீழ் வெ.7 லட்சம் கடனுதவியை 162 வியாபாரிகளுக்கு பெற்றுத் தந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் 38ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று ரோயல் சுங்கை உசோங் கிளப்பில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய போது அவர் மேற்கண்ட தகவலை அவர் கூறினார்.
மேலும் தற்போது தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் தற்போது MUDRA திட்டத்தின் கீழ் வெ.220 மில்லியன் மானியம் ஒதுக்கப்பட்ட்டுள்ளது. இதனை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் குறைந்தபட்சம் 20 மில்லியனைவாது நெகிரி மாநில தொழிலியல் சங்கத்தின் கீழ் பெற்று தர இலக்கு கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
0 Comments