loader
சர்வதேச சமையல் போட்டியில் தங்கம் வென்று “மாஸ்டர் செஃப்” பட்டம் பெற்று மலேசியாவிற்கு பெருமை சேர்த்த செஃப் மன்னன்!

சர்வதேச சமையல் போட்டியில் தங்கம் வென்று “மாஸ்டர் செஃப்” பட்டம் பெற்று மலேசியாவிற்கு பெருமை சேர்த்த செஃப் மன்னன்!

கோலாலம்பூர், மே 20 –
சமையல் துறையில் மலேசியாவின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்தும் வகையில், மாஸ்டர் செஃப் மற்றும் சிறந்த சமையல் கலைக்கான விருதைப் பெற்று தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் “செஃப் மன்னன்” என்று அழைக்கப்படும் 35 வயதுடைய லெட்சுமணன் புலேன்ரன்.

உழைப்பு, ஒழுக்கம் மற்றும் புதுமையான சமையல் கலைத்திறன் ஆகியவற்றின் மூலம் சர்வதேச அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள செஃப் மன்னன், மலேசிய சமையல் பாரம்பரியத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

2025ஆம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற Creative Chefs Forum Season 3 சர்வதேச சமையல் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலைஞர்களுடன் போட்டியிட்டு, " Heritage Cuisine – Hot Cooking" பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

அவர் தயாரித்த மலேசிய மக்களின் விருப்பமான உணவான பிரியாணியின்
பாரம்பரிய முறையிலான தயாரிப்பும்,
தனித்துவமான சுவையும் மற்றும்   அணுகுமுறையும்  நடுவர் குழுவினர்களின்  சிறந்த பாராட்டுகளை பெற்றதோடு, சுவை, அலங்காரம் மற்றும் படைப்பாற்றலில் சிறந்து விளங்கிய அவரது திறமை அனைவரையும் கவர்ந்தும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற Indian Culinary Premier League போட்டியிலும் செஃப் மன்னன் மலேசியாவை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இப்போட்டியில் அவர் “Honorary Award – Diploma in Culinary” விருதைப் பெற்றதுடன், அதிகாரப்பூர்வமாக Culinary Gold Winner சமையல் கலைக்கான
தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

Royal Bengal Master Chef Organization (RBMCO) வழங்கிய இந்த அங்கீகாரம், செஃப் மன்னனின் சர்வதேச தரமான சமையல் திறனை உலகுக்கு மீண்டும் நிரூபித்துள்ளது.

“Chicken Rendang உடன் Ghee Rice” என்ற அவரது சிறப்பு உணவு, மலேசியாவின் உண்மையான பாரம்பரிய சுவையை உலக அரங்கில் சிறப்பாக எடுத்துக்காட்டியது.
சுவை சமநிலை, தொழில்நுட்ப திறன், புதுமை மற்றும் கலைநயமிக்க அலங்காரம் ஆகியவற்றிற்காக அவர் நடுவர்களின் உயர்ந்த பாராட்டுகளைப் பெற்றார்.

சமையல் துறையில் கொடி கட்டிப் பறக்கும் செஃப் மன்னனின் இந்த சாதனைகள், இளம் சமையல் கலைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளதுடன், மலேசிய சமையல் கலையின் பெருமையையும் உலகளவில் உயர்த்தியுள்ளது.
அவரின் இந்த மகத்தான சாதனைகளுக்காக சமூகத்தின் பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

leave a reply

Recent News