கோலாலம்பூர், மே 18-
அந்நியத் தொழிலாளர்கள் பற்றாகுறையால் தொழில்முனைவர் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இந்திய வியாபாரிகள் அதிக அளவில் பாதிகப்பட்டு வருகின்றனர் என மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கவலையாக தெரிவித்தார்.
கேட்டு கேட்டு கையேந்தி மனம் உடைந்து போச்சு, அமைச்சகம் அமைச்சகமாக நடந்து கால்கள் ஓய்ந்து போச்சு. ஆனால் எங்களுக்கான தீர்வும் பிறக்கவில்லை கதவும் திறக்கவில்லை என்றார் அவர்.
உள்துறை அமைச்சு மற்றும் மனிதவள அமைச்சின் தொடச்சியான மௌனத்தில் தொழில்முனைவர்கள் எங்களை தெருவில் விட்டு விடாதீர்கள் என டத்தோ கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாக போய் கொண்டிருக்கிறது. வியாபாரத்தை நடத்த முடியாமல் பல கடைகள் மூடப்பட்டு வியாபாரிகள் கடன் தொல்லையில் சிக்கி தவிக்கிறார்கள்.
இந்த இரண்டு அமைச்சின் மௌனம் நீடிக்குமானால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களுக்கு ஒரு விடியல் கொடுக்க வேண்டும். அதையும் விரைந்து கொடுக்க காரணம் நிலைமை அதிக மோசமாக உள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு மற்றும் இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றார் அவர்.
உடனே பிரதமர் தலையிட வேண்டும், இல்லையேல் வெள்ளம் வந்த பிறகு அனைப்போட்டு ஒரு புண்ணியம் இல்லை. அனைவருக்கும் அது பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கும் என்றார் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன்.
0 Comments