கோலாலம்பூர்,மே 14-
பாஸ் கட்சியின் இஸ்லாம் அல்லாதோர் நலன் காக்கும் இணை பிரிவான டி.எச்.பி.பி (dewan himpunan pendukung pas) அதன் தலைவராக கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி அவர்களின் சிறப்பு அதிகாரி குமரேசன் பேராளர்களால் தேர்வு செய்யப்பட்டார்.
தலைவர் பதவிக்கு டத்தோ தீபாகரன் மற்றும் குமரேசன் போட்டியிட்ட நிலையில் குமரேசன் அதிக வாக்கு பெற்று தேர்வு செய்யப்பட்டார்.
அதே நேரத்தில் துணைத் தலைவர் பதவிற்கு போட்டி இல்லாத நிலையில் லீம் குவான் செங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
உதவி தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவிய நிலையில் சூரிய நாரயணன் வெற்றி பெற்று தேர்வு செய்யப் பட்டார்.
அதே நேரத்தில் செயலவை உறுப்பினர்களுக்கு 30 பேர்கள் போட்டி போட்ட நிலையில் வாக்கெடுப்பில் பூபாலன் அதிக வாக்குகள் பெற்று முதல் நிலையில் வெற்றிப் பெற்றார் .
அவரை தொடர்ந்து லோவ் லீ லீயோங், டத்தோ ராகு, டத்தோ குமார், ,ஹரி ஜானார்தன், சரோஜினி, குண சீலன், பரமசிவம், குணாளன், கணேசன், சோ சியூ மார், ஜெய குமார், சங்கரன், புனிதா பச்சையம்மா, புருத்சோதினி, குண சேகரன் மற்றும் லாவ் சின் சுவா ஆகையோர் செயலவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
0 Comments