loader
பி.பி.ஆர் வீட்டு வாடகை கட்டண பாக்கி தொடர்பாக தவிக்கும் மக்களுக்கு  சுமூகமான  தீர்வு கிடைக்க பி.பி.பி முயற்சி!

பி.பி.ஆர் வீட்டு வாடகை கட்டண பாக்கி தொடர்பாக தவிக்கும் மக்களுக்கு சுமூகமான தீர்வு கிடைக்க பி.பி.பி முயற்சி!

கோலாலம்பூர், மே 14 -
பல மாதங்களாக செலுத்தப்படாமல் இருந்த மாத வாடகை கட்டண பாக்கிகளைச் செலுத்துவது குறித்து ஸ்ரீ ஆமான் குடியிருப்பாளர்கள் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்ற (DBKL) அதிகாரிகளுக்கு இடையில் முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டு, நிலுவையில் உள்ள வாடகைத் தொகைகளை ஒருமுறை அல்லது தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால், உடனடியாக முழுத் தொகையையும் செலுத்த முடியாத சூழ்நிலையை பலர் எடுத்துக்கூறினர்.

இதற்கு பதிலளித்த மாநகர் மன்ற அதிகாரிகள், குடியிருப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, நெகிழ்வான கட்டண திட்டங்கள் (installment plans) அறிமுகப்படுத்தும் சாத்தியம் குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தை கோலாலம்பூர் பிபிபி  தலைவர் சத்யா மற்றும் சிகாம்பூட் தொகுதி தலைவர்   டத்தோ வினோத் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அவர்கள் , குடியிருப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல், மனிதநேய அணுகுமுறையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பில் பேசிய பிபிபி கட்சியின் கூட்டரசுப் பிரதேச தலைவர் சத்தியா, கோலாலம்பூரில் உள்ள பி.பி.ஆர் (PPR) குடியிருப்புகளில் இதுபோன்ற சந்திப்புகளை பி.பி.பி கட்சி  தொடர்ந்து ஏற்பாடு செய்யும் என தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News