loader
வம்சம் அமைப்பின் ஏற்பாட்டில் பத்துமலை திருத்தளத்தில் புத்தர காமஸ்தி யாகம்: குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்!

வம்சம் அமைப்பின் ஏற்பாட்டில் பத்துமலை திருத்தளத்தில் புத்தர காமஸ்தி யாகம்: குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்!

கோலாலம்பூர், மே 12 – குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ நிகழ்ச்சி வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு பத்துமலை திருத்தளம் பகுதியில் நடைபெறவுள்ளது.

கரு உருவாகி வம்சம் விருத்தியாக இறைவனை பிரார்த்தனை செய்யும் யாகமே ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ என்று வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிகாட்டியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இந்த யாகத்தில் கட்டாயம் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். “சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குவோம்” என்ற கருப்பொருளில் வம்சம் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஆன்மீக நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகள் வழங்கவுள்ளனர். “அறிவியல் மருத்துவமாகவும், ஆன்மீகம் நம்பிக்கையாகவும் உள்ளது” என சத்தியவதி கூறினார்.

மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை பேசுகையில், “ஏன் கர்ப்பம் தரிக்க முடியவில்லை என்பது தொடர்பில் விரிவான விளக்கத்தை வழங்கப்படும். மலேசியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 1.4 விழுக்காடு மட்டுமே மக்கள் தொகை உயர்ந்துள்ளது” என்றார்.

அதேவேளை, டாக்டர் உமா பெண்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தை பாக்கியம் தாமதமாகலாம் என்றும், காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிகுருக்கள், ஆன்மீகம் மனிதர்களுக்கு மன உறுதியையும் அமைதியையும் அளிக்கிறது. நமது குறைகளை தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு அளப்பரியது. வேத மந்திரங்கள் வாழ்க்கை முறையையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றன என்று தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News