ஷா ஆலம், மே 12-
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் 22ஆவது முறையாக தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து போட்டில் நடத்தப்பட்டவுள்ளது.
இம்முறையில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 65 ஆண்கள் அணிகளும் 34 பெண்கள் அணிகளும் இப்போட்டியில் களம் காணவுள்ளதாக சங்கத்தின் தலைவர் பத்துமலை தெரிவித்தார்.
இப்போட்டி வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணி முதல் ஆர்ஆர்ஐ திடலில் நடைப்பெறவுள்ளது.
இந்த போட்டியை சிலாங்கூர் மாநில தலைமையாசிரியர் சங்கம் இணைந்து நடத்துகிறது.
ஆண்களுக்கான அணிகளில் முதல் 16 இடங்களில் வெற்றிப்பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. முதல் நிலையில் வெற்றிப்பெறும் அணிக்கு நமசிவாயம் சுழற்கிண்ணம் வழங்கப்படும்.
பெண்களுக்கான அணிகளில் முதல் 12 இடங்களில் வெல்லும் குழுக்களுக்கு பரிசுகள் உண்டு. இந்த பிரிவின் வெற்றி குழுவிற்கு ரவிந்திரன் சுழற்கிண்ணம் வழங்கப்படும் என அவர் சொன்னார்.
இந்த போட்டிக்கான அணிகள் பிரிப்பதற்கான குலுக்கல் இன்று சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைப்பெற்று.
இந்த போட்டிக்கு மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு மிகவும் அவசியம் என பத்துமலை தெரிவித்தார்.
0 Comments