loader
வானுயர வளர்த்த சாமி! வானம் தொட்டு போனார்! டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மறைவுக்கு வெற்றி விக்டர் இரங்கல்!

வானுயர வளர்த்த சாமி! வானம் தொட்டு போனார்! டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மறைவுக்கு வெற்றி விக்டர் இரங்கல்!

கோலாலம்பூர், மே.9-
மைக்கியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மறைவுக்கு  தமிழ் லென்ஸ் ஆசிரியர்  வெற்றி விக்டர் தனது இரங்கலை தெரிவித்தார்.

நம் நாடு  நாளிதழ் வாயிலாக எனக்கு நன்கு அறிமுகமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன், எனக்கு அங்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். வேறொரு நாளிதழில் இருந்து நம் நாடு வந்த எனக்கு உரிமையாளர் என்ற முறையில் நடந்து கொள்ளாமல் திறமை துணிச்சல் உள்ளவர்களை தட்டி கொடுக்கும் ஒரு நம்பிக்கையாக இருந்தார்.

மக்கள் செய்தியை எழுதிய என்னை அரசியல் செய்தி எழுத வாய்ப்பு கொடுத்தவர் இவர். அந்த நாளிதழ் என் வாழ்க்கையை மாற்றியது.

ஒரு பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு தகுதியான சம்பளத்தை கொடுத்தது டான்ஸ்ரீ கென்னத் நடத்திய நாளிதழ் மட்டுதான். முழு சுதந்திரமும் அங்குதான்  கிடைத்தது. அரசியல் வாதிகளை கண்டு அச்சம் கொள்ளதே என ஊக்கம் ஊட்டியவர் கென்னத் ஈஸ்வரன் தான். ஒரு சாதாரண செய்தியாளரை அரசியல் செய்தியாளர், செய்தி ஆசிரியர்  என இளம் வயதில் நம்பி வாய்ப்பு கொடுத்தவர் அவர்.

என்னை "CILI PADI" என்று அழைப்பார். அரசியல் செய்தியிலும் சரி, அவர் சார்ந்த மைக்கி இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பிலும் சரி என்னை முதல் தேர்வாக விரும்புவார். அந்த நம்பிக்கை கொடுத்து கொடுத்து  என் எழுத்தை ரசித்த நபர் அவர்.

பிறகு மைக்கியில் அவரது  அலுவலக  தமிழ் பிரிவு செயலாளராக  எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் பல நாடு குறிப்பாக இந்தியா,  டெர்பன்  இலங்கை,  பொண்டிச்சேரி என பல  உலகத் தமிழ் பொருளாதார மாநாடுகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பல அரசாங்க பொருளாதார கூட்டத்தில் திட்டங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
மைக்கி- யில் அவர் ஒய்வு பெறும் போது...  நான் அடுத்து என்ன செய்ய போகிறேன் என என் மீது  கவலை பட்டு அவர் எனக்கு விதைத்த விதைதான்... இன்று தமிழ் லென்ஸ்   இணைய ஊடகம்.

வாரம் ஒரு முறை என்னிடம் பேசுவார். பிறகு  ஒய்வின் காரணமாக மாதம் ஒரு முறை நேரில் சென்று பார்ப்பேன். பிறகு தொலைபேசியில் பேசுவோம்
தீடீர்- தீடீர் என்று என்னை அழைத்து பேசுவார். சில நேரங்களில்  அவரது குடும்பத்தினர்  அப்பா பேசவேண்டும் என்று சொல்வார்கள் பேசுவார் இப்போது அந்த பேச்சு நின்று விட்டது.

இப்படி என்ன வானுயர வளர்த்த சாமி இன்று வானம் தொட்டு போனது  என்பது எனக்கு  தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு தான்.

அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் நன்றியுடன்  வெற்றி விக்டர்.

0 Comments

leave a reply

Recent News