கோலாலம்பூர் -9
மைக்கியின் வளர்ச்சிக்கும், இந்திய வர்த்தகர்களின் வளர்ச்சிக்கும் மறைந்த டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என
மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மைக்கியின் முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் இன்று காலை சுமார் 6.00 மணியளவில் காலமானார் என்ற செய்தி மைக்கி உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடனும் மிகுந்த துக்கத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.
டான் ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரனின் குடும்பத்தினருக்கு மைக்கி இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
டான்ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் ஒரு புகழ்பெற்ற, மதிக்கப்படும் தொழில்முனைவராகவும், தொலைநோக்குப் பார்வை கொண்டவராகவும் திகழ்ந்தார்.
அவர் மைக்கியின் வளர்ச்சிக்கும், மலேசியாவில் உள்ள இந்திய வர்த்தக சமூகத்தின் வளர்ச்சிக்கும் அவர்கள் வலுப்பெறுவதற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கினார்.
தொழில்முனைவோருக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் அவரது தலைமைத்துவம், அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவை என்றும் நினைவுகூரப்பட்டு போற்றப்படும்.
அவரது சேவை ஆண்டுகள் முழுவதும், மைக்கியின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர் ஒரு முக்கியப் பங்காற்றினார்.
மேலும், வர்த்தக சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பலருக்கு உத்வேகம் அளித்த ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார் என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தனது இரங்கல் செய்தியில் கூறினார்.
0 Comments