loader
பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் இளம் தலைவர்களுக்கு பதவி நியமனம்

பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் இளம் தலைவர்களுக்கு பதவி நியமனம்

பத்துமலை, ஏப்.19-
பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் 2026ஆம் ஆண்டிற்கான இளம் தலைவர்களுக்கான பதவி நியமன விழா (Majlis Pelantikan Watikah Pemimpin Muda 2026) இன்று சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவன் நவயுக பாரதி த/பெ தியாகராஜன் இறை வாழ்த்து பாடினார். தொடர்ந்து முனைவர் விக்டர் ஆசிர்வாதம் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி செளண்டேஸ்வரி கிருஷ்ணன் தலைமையுரை வழங்கினார்.
இவ்விழாவின் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்ட தொடர்புத் துறை அதிகாரி சர்ஜன் கமால் லிங்கம், இளம் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார். தொடர்ந்து, இளம் தலைவர்களுக்கான பதவி நியமன நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் ரத்னக்குமார் வரதராஜு, சர்ஜன் கமால் லிங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ புவனேந்திர குமார், தலைமையாசிரியர் மற்றும் துணை தலைமையாசிரியர்கள் இணைந்து கலந்துகொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, பள்ளியின் தலைமை மாணவராக அரண் த/பெ திலிப்குமார் கனகராஜ், முதல் துணைத் தலைமை மாணவியாக ஜனனி த/பெ ஹரிராஜா, இரண்டாம் துணைத் தலைமை மாணவராக தேவ்தர்ஷன் த/பெ சிவகாந்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனச் சான்றிதழ்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன.
மேலும், மாணவர் தலைவர்கள், கருவளமைய தலைவர்கள் மற்றும் வழிகாட்டித் தலைவர்கள் என மொத்தம் 238 மாணவர்கள் பதவி நியமனச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
பள்ளியின் நெறியுரைஞர் குமாரி வித்யா தியாகராஜா, நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி புனிதவள்ளி முனீஸ்பரன் மற்றும் மாணவர் தலைவர்களின் பொறுப்பாசிரியர் குமாரி துர்காஷினி சுப்பிரமணியம் ஆகியோரின் தலைமையிலும், ஆசிரியர்கள் ஒத்துழைப்பிலும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிய தேவஸ்தான தலைவர் டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ சிவகுமார் நடராஜா, மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம், பெற்றோர் மற்றும் நலத்திட்ட உறுப்பினர்கள் ஆகியோருக்கு தலைமையாசிரியர் நன்றி தெரிவித்தார்.
“இன்றைய தலைவர்கள் நாளைய சமுதாயத்தின் தூண்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 Comments

leave a reply

Recent News