கோலாலம்பூர், ஏப்.19-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்தித்து இந்திய முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக பேச துணை பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோ ஸ்ரீ ஜாஹிட் ஹமிடி வாயிலாக உதவி கேட்டும் இப்போது வரை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் கடிதம் மட்டும் வருகிறது. இந்த அமைச்சை பாருங்கள் அந்த அமைச்சை பாருங்கள் என்று. அவர்களை சந்தித்தால் எந்த பதிலும் இல்லை. இது எங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்று அவர்கள் பதில் சொல்கிறார்கள் என கிம்மா தலைவர்
டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் தெரிவித்தார்.
பிறகு திரும்பவும் பிரதமர் துறைக்கு கடிதம் எழுதினால் நேரம் இல்லை என்ற பதில் எங்களுக்கு வருகிறது.
கிம்மா கட்சி என்பது 50 ஆண்டுகள் வரலாறு உள்ள கட்சி ஆனால் எங்களுக்கு இந்த் அரசாங்கத்தில் கிடைக்கும் மரியாதை மனநிறைவு கொடுக்கவில்லை என்றார்.
1மில்லியன் இந்திய முஸ்லிம் வாழும் இந்த நாட்டில் அந்த சமுதாயத்தை பிரதிநிதிக்கும் கிம்மா கட்சியை சந்திக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு நேரம் இல்லை... ஆனால் இந்திய நடிகர்களான ரஜினி- கமல் என்ற நடிகர்களை சந்திக்க நேரம் உண்டும் என கிம்மா தலைவர் வெளிப்படையாக தெரிவித்தார்.
எங்கள் சமுதாயமும் வீதியில் வந்து போராடா வேண்டுமா அல்லது பிரதமர் அலுவலகத்தில் வந்து மறியல் செய்ய வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் உங்கள் அமைச்சர்கள் மலேசிய இந்திய முஸ்லீம் சமுதாயத்தின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பது இல்லை. சரி பிரதமரை சந்தித்து சொல்லலாம் என்றால் இந்த விவகாரத்தில் பிரதமர் கவனம் செலுத்த நேரம் இல்லை என்றார் கிம்மா தலைவர்.
எங்கள் பிரச்சினை பிரதமர் துறை உடனே கவனிக்க வேண்டும் இல்லை என்றால் எங்களுக்கும் ( reformasi ) தெரியும். எங்களின் பிரச்சினையை பிரதமர் பார்வைக்கு கொண்டு செல்ல ஒரு சமுதாய முன்னெடுப்பு நடக்கும் என்றார் கிம்மா தலைவர்.
நாங்களும் இந்த நாட்டு மக்கள் , இந்திய நாட்டு பிரபலமான ரஜினி கமலுக்கு உள்ள முக்கியதுவம். ஏன் 1 மில்லியன் வாக்கு வைத்துள்ள எங்கள் சமுதாயத்திற்கு இல்லை என கிம்மா தலைவர் டத்தோ ஸ்ரீ சைட் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நாட்டில் சிறுபான்மையான நாங்கள் 126 தொழில் துறையில் ஈடுபட்டு தொழில் செய்து நாட்டின் மேம்பாட்டிற்கு எங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறோம் ஆனால் அரசாங்கத்தின் பார்வை எங்கள் சமுதாயத்தின் மீது பட வில்லை என்பது மிகப் பெரிய கேள்வியை எழுப்புவதாக கிம்மா தலைவர் தெரிவித்தார்.
செய்தி : வெற்றி விக்டர்
0 Comments