loader
ஒற்றுமை அரசாங்க அமைச்சர்கள் இந்திய முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை  கண்டுக்கொள்வதே  இல்லை!   துணை பிரதமர் முன்னிலையில் போட்டு உடைத்தார் கிம்மா தலைவர் !

ஒற்றுமை அரசாங்க அமைச்சர்கள் இந்திய முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை கண்டுக்கொள்வதே இல்லை! துணை பிரதமர் முன்னிலையில் போட்டு உடைத்தார் கிம்மா தலைவர் !

கோலாலம்பூர், ஏப்.18-

கிம்மா கட்சியின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று தலைநகர் உலக வாணிப மையத்தில் நடைப்பெற்றது.

தேசிய முன்னணியின் தலைவரும் துணை பிரதமருமான  டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சிறப்பு வருகை புரிந்து கூட்டத்தை அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஆண்டு கூட்டத்தில் பேசிய கிம்மா தலைவர் சைட் இப்ராஹிம் , மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயம் சுமார் 126 தொழில் துறைகளில் தொழில் செய்துவருகிறது. சிறுபான்மை சமுதாயமாக  நாங்கள் இருந்தாலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் பங்கு அளப்பரியது என்றார்.

இருந்தபோதிலும் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் இந்திய முஸ்லீம் சமுதாயத்திற்கு என்று ஒரு தனிப்பட்ட வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்படவில்லை. அது கவலையாக உள்ளது என்றார்.

கிம்மாவை பொறுத்தவரை தேசிய முன்னணி சார்ந்த அமைச்சர்கள் இந்திய முஸ்லிம் சமுதாய பிரச்சனைகளை செவி சாய்க்கின்றனர். ஆனால் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மற்ற அமைச்சர்கள் குறிப்பாக உள்துறை அமைச்சு , கல்வி அமைச்சு , மனிதவள அமைச்சு எங்கள் பிரச்சினைகளை தீவிரமாக செவி சாய்ப்பது இல்லை என சைட் இப்ராஹிம், துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ  ஹாமாட் சாயிட் இப்ராஹிம்  முன்னிலையில் போட்டு உடைத்தார்.

குறிப்பாக இந்திய முஸ்லிம் மக்கள் செய்யும் தொழில்களான நகைக்கடை,  மளிகை கடை , மற்றும் உணவகங்களுக்கு அந்நிய தொழிலாளர்  பற்றாக்குறை பல ஆண்டுகளாக இருந்தும், தீர்வு இல்லை. இதனால் கடந்த 3 ஆண்டுகள் பல கடைகள் மூடப்பட்டு வருகிறது.

நிலைமை இப்படியே நீடித்தால் இந்திய முஸ்லீம் சமுதாயம் மீண்டும் எழுவது கடினம், ஆகையால் அரசாங்கம் இந்த பிரச்சினை மீது கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லது  இந்திய முஸ்லீம் குரலாக அரசாங்க பொறுப்பில் கிம்மா ஒரு அங்கமாக அங்கீகரிக்கப் படவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஒரே வழி கிம்மா கட்சி தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியாக  அங்கீகரப்பட வேண்டும் என சைட் இப்ராஹிம் தேசிய முன்னணி தலைவரிடம் கோரிக்கை வைத்தார்.

50 ஆண்டுகளாக காத்திருந்து விட்டோம். எங்களுக்கு  எங்களை உறுப்பு கட்சியாகவும் அதே நேரத்தில் தேர்தலில் 2 நாடாளுமன்ற தொகுதி மற்றும் மூன்று சட்டமன்ற தொகுதி  கிம்மாவுக்கு வழங்கப்படவேண்டும் என கூறினார்.

அதோடு இந்திய முஸ்லிம் மேம்பாட்டிற்கு சிறப்பு நிதி ஆண்டு தோறும் வரவு செலவு திட்டத்தின் வாயிலாக ஒதுக்கப்படவேண்டும் என சைட் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News