கோலாலம்பூர், ஏப்.11-
நாட்டில் டீசல் விலை வாரத்திற்கு வாரம் உயர்ந்து வருவதால் குத்தகையாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆகையால் டீசலுக்கு நிலையான விலையை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அரசாங்கம் மானியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என அதன் தலைவர் ஜி.ஆனந்தன் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கில் நடக்கும் போரால் பெட்ரோல் விலை ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக டீசலின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு எங்களை போன்ற குத்தகையாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
காரணம் ஒரு குத்தகையை பெறுவதற்காக விலைப் பட்டியலை நாங்கள் வழங்குகிறோம்.
அதில் டீசலில் விலையை அடிப்படையாக கொண்டும் மொத்த விலை வழங்கப்படுகிறது.
ஆனால் ஒவ்வொரு வாரமும் விலை உயர்ந்தால் நாங்கள் எப்படி உறுதியான விலைப் பட்டியலை கொடுக்க முடியும்.
அப்படியே இந்த விலையை வைத்து குத்தகையை பெற்றால் அது எங்களுக்கு நஷ்டத்தை தான் தரும்.
ஆகவே இவ்விவகாரத்தை அரசாங்கம் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
குறிப்பாக அரசாங்கம் டீசலுக்கு நிலையான விலையை அறிவிக்க வேண்டும்.
இல்லையென்றால் அரசாங்கம் மானியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று ஆனந்தன் மேலும் வலியுறுத்தினார்.
0 Comments