loader
எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்காக மஇகாவின் உயர்க்கல்வி வழிக்காட்டி கருத்தரங்கு!

எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்காக மஇகாவின் உயர்க்கல்வி வழிக்காட்டி கருத்தரங்கு!


கோலாலம்பூர், மார்ச் 31-
இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவுகளை பெற்ற மாணவர்களுக்காக மஇகா இளைஞர் பிரிவு உயர்க்கல்வி குறித்த வழிக்காட்டி கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஆண்டில் 4 லட்சம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியுள்ளனர். இவ்வாண்டு அதன் முடிவுகள் வெளிடப்பட்ட வேளையில் 14 ஆயிரம் மாணவர் அனைத்து பாடங்களிலும் ஏ-க்கள் பெற்றுள்ளனர்.

ஆகையால் அவர்களின் மேற்கல்வி குறித்த விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கவே உயர்க்ல்வி இலட்சியப் பயணம் எனும் வழிக்காட்டி கருத்தரங்கை மஇகா இளைஞர் பிரிவு நாடு முழுவதிலும் நடத்தவுள்ளதாக தேசிய ரீதியிலான ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எல்.சத்திஸ்குமார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளிலும் இந்த உயர்க்கல்வி மாணவர்களுக்கான வழிக்காட்டி கருத்தரங்கு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் நாடு தழுவிய அளவில் 1,500 மாணவர்கள் இதில் கலந்து கொண்டதாகவும் அவர் சொன்னார்.

நாளை ஏப்ரல் 1ஆம் தேதி மலாக்காவிலும் ஏப்ரல் 4ஆம் தேதி பகாங்கிலும் ஏப்ரல் 5ஆம் தேதி கெடா, பேரா, சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், நெகிரி, ஜொகூர் ஆகிய மாநிலங்களிலும் இந்த வழிக்காட்டி கருத்தரங்கு நடைப்பெறவுள்ளது.

எஸ்பிஎம் முடித்த மாணவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும், எந்த துறையை தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும் என பல விளக்கங்கள் இந்த கருத்தரங்கில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

மேலும் மாணவர்களுக்கு நேருக்கு நேர் (1 to 1) விளக்கமும் அளிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

உயர்க்கல்வி பற்றிய விளக்கத்தை போலிடெக்னிக், உயர்க்கல்வி அமைச்சு, போன்றவையை சேர்ந்த அதிகாரிகளால் வழங்கப்படும்.

ஆகையால் இந்த வழிக்காட்டி கருத்தரங்கு தொடர்பில் விவரங்களை பெற 019-4860087 என்ற எண்ணுடன் சத்திஸ்குமாரை தொடர்புக் கொள்ளலாம்.

0 Comments

leave a reply

Recent News