ஷா ஆலம், மார்ச் 14-
நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் ஆலய பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் நடத்து நோக்கம் மஇகாவுக்கு இல்லை என்றும் இந்த பிரச்சினையை களைய மலேசிய இந்து சங்கம், மஹிமா ஆகியவற்றுடன் இணைந்து மஇகா செயல்படும் என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஆலயங்களை கொண்டு அரசியல் நடத்தியவர்கள் உண்டு. ஆனால் அந்த பாணி எங்களுக்கு புறம்பானதாகும்.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு நான் பிரதமரை சந்தித்தேன். சுமார் ஒன்றரை மணிநேரம் அவருடன் கலந்துரையாடினேன். ஆலய விவகாரம் உட்பட சமுதாயம், அரசியல் ஆகியவற்றை பற்றி பேசினேன். முக்கியமாக தற்போது சர்ச்சையாக உள்ள ஆலய விவகாரம் தொடர்பில் பேசியதாக டான்ஸ்ரீ கூறினார்.
நம் தெய்வங்களை அவமானம் படுத்துவது சரியல்ல. அனைத்து அமைப்புகளும் மலேசிய இந்து சங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தை நாங்கள் முன்னெடுத்தால் அது அரசியல் ஆகிவிடும். அதனால் இந்த பிரச்சினையை பெரியதாக ஆக்க நாங்கள் விரும்பவில்லை. இதனை மலேசிய இந்து சங்கம் முன்னெடுத்தால் சமய பிரச்சினையாகவே இருந்துவிடும். ஒன்றிணைந்து அனைவரும் இந்த பிரச்சினையை களைவோம் என்றார் அவர்.
0 Comments