loader
32 ஆண்டுகளாக ரமலான் உதவிகளை வழங்கி வரும் எசான் குழுமம்; இவ்வாண்டு 5,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன! -டத்தோ அப்துல் ஹமிட்

32 ஆண்டுகளாக ரமலான் உதவிகளை வழங்கி வரும் எசான் குழுமம்; இவ்வாண்டு 5,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன! -டத்தோ அப்துல் ஹமிட்

கோலாலம்பூர்,மார்ச் 12-

எசான் வர்த்தக குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்வதாக அதன் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமிட் கூறினார்.

அவ்வகையில் இன்று சிகாம்புட்டில் 200 பேருக்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தலைமையில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நோன்பு பெருநாளை முன்னிட்டு எசான் வர்த்தக குழுமம் ரமலான் உதவிகளை வழங்கி வருகிறது.

இவ்வாண்டும் கிட்டத்தட்ட 5,000 பேருக்கு இந்த உதவிகளை எசான் வழங்கியுள்ளது.

வசதிக் குறைந்தவர்கள், ஆதரவற்றவர்கள் என பல தரப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

அமைச்சர் இவ்விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சி என டத்தோ அப்துல் அமிட் தெரிவித்தார்.

குறிப்பாக இவ்விழா கூட்டரசுப் பிரதேச அறவாரியம் உட்பட பல அமைப்புகளுடன் நடத்தப்பட்டது.

அமைச்சர் ஹன்னா இயோ துடிப்புமிக்க அமைச்சராக உள்ளார்.

அவரின் வருகை கூட்டரசுப் பிரதேசத்திற்கு மேலும் உருமாற்றத்தை கொண்டு வரும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News