கோலாலம்பூர், மார்ச் 11-
பள்ளிவாசல்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லாமல் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் பயிற்சி மையங்களாகவும் மாற வேண்டும் என்று முக்மின் அமைப்பின் தலைவர் டத்தோ ஷாஹுல் அமிட் வலியுறுத்தினார்.
தொடர்ந்து வழங்கப்படும் பயிற்சிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற உதவும் என்றார்.
உதாரணத்திற்கு இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பயிற்சிகளும், பெண்களுக்கு தையல் பயிற்சி போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் இன்று கம்போங் பண்டான் பள்ளிவாசலில் நடைப்பெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்றைய நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் மட்டும் சுமார் 450 பேர் கலந்து கொண்டு நோன்பு துறந்தனர்.
முக்மின் அமைப்பின் ஏற்பாட்டில் நாடு தழுவிய அளவில் சுமார் 3,500 குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாள் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த கம்போங் பண்டான் பள்ளிவாசலுக்கு தனி சிறப்பு இருப்பதாகவும், இங்கு தினமும் சுமார் 1,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments