டெங்கில், அக். 11 —
மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC) மற்றும் மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சுடன் இணைந்து, ரக்கான் மூடா ரக்கான் லித்தார் முயற்சியின் கீழ், முதல் முறையாக இந்திய பெண்களுக்கான கார் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் அக்டோபர் 11ஆம் திகதி 2025 (சனிக்கிழமை) அன்று டெங்கிலிலுள்ள Tapak Lepark வளாகத்தில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
இந்நிகழ்வில் பல இந்திய பெண்கள் தங்களது தனிப்பட்ட கார்களுடன் கலந்து கொண்டு தங்கள் ஆர்வத்தையும் திறமையையும் அவர்கள் நவீன முறையில் அலங்கரித்த கார்களின் மூலமாக வெளிப்படுத்த உள்ளனர்.
அத்துடன், இந்த கார் கண்காட்சியில் அழகு படுத்தப்பட்ட பெண்களின் கார்கள் மற்றும் அதி நவீன சூப்பர் பைக்குகள் போன்ற வாகனங்களும் காட்சிப்படுத்தப்படும் என இந்நிகழ்ச்சியின் திட்ட இயக்குநர் பவீத்தரன் இளங்கோவன் தெரிவித்தார்.
இது ஒரு சாதாரண கார் கண்காட்சி அல்ல; இளைஞர்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தும் விழா என அவர் கூறினார்.
இந்நிகழ்வை மேலும் மெருகூட்டும் வகையில் பொதுமக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்டு களிக்க அழைக்கப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு பவீத்தரன் இளங்கோவன் (தொலைபேசி: 010-396 1002 என்பவரை தொடர்பு கொள்ளலாம்.
0 Comments