கோலாலம்பூர், அக்.8-
சிலாங்கூர் மாநில ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் இயக்கம் தீபாவளியை முன்னிட்டு செலாயாங் - பத்துமலை பகுதியை சேர்ந்த பி40 பிரிவை சேர்ந்த சுமார் 280 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி உதவி பொருட்களை வழங்கியது.
இந்த இயக்கத்தின் தலைவர் மருதைய்யா சுப்ரமணியம் பேசுகையில், கடந்த ஆண்டு சுமார் 180 மக்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை அது 280ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
எங்களின் இயக்க உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் இந்த வட்டாரத்தில் உள்ள பி 40 மக்கள் அடையாளம் காணப்பட்டனர். அதோடு எங்கள் முயற்சிக்கு சில நல்லுள்ளங்கள் உதவி கரம் நீட்டி உள்ளனர். அவர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.
கலை நிகழ்ச்சி ,கோலம் போட்டி சுவையான விருந்துடன் மக்களுக்கு இந்த உதவி நிதி கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அங்கு வருகை தந்த சிறுவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் டத்தோ ஹரி, டத்தோ பார்த்திபன், டத்தோ பாலமுருகன், டத்தோ பிரகாஷ், நகராண்மைக் கழக உறுப்பினர் தேவேந்திரன், சரவணன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
அவர்கள் இந்த இயக்கத்திற்கு கொடுத்த வற்றாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்க உறுப்பினர்கள் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.
0 Comments