கோலாலம்பூர்,அக்.5-
நடிகரும் இயக்குநருமான தனுஷ், அருண்விஜய், சத்யராஜ் மற்றும் பல முன்னணி கலைஞர்களின் சிறப்பான நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படம், மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகி, தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது.
இத்திரைப்படம் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய அளவிற்கு அற்புதமாக இயக்கப்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
அனைவரும் திரையரங்குகளில் நேரடியாக வந்து இப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என நடிகர் தநுஷும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக் கூறுகையில்,
மலேசியாவில் தரமான தமிழக திரைப்படங்களை கொண்டு வருவது எங்களுக்கு மகிழ்ச்சி. தனுஷ் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டுகளிக்க வேண்டும்.
குடும்ப கதையான இத்திரைப்படம் தனி ஒரு பாணியில் இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை குடும்பத்தினருடம் தாரளமாக கண்டுக் கழிக்கலாம் என அவர் சொன்னார்.
இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி அண்மையில் செராஸ், வேலோசிட்டி மாலின் திரையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகமான ரசிகர்கள் திரண்டதால் நிகழ்ச்சி விழாவைப் போல இருந்தது.
0 Comments