loader
நிலையில்லா அரசியல் சவால்களை மஇகா இன்னும் வலுவாக எதிர்கொள்ள வேண்டும்!

நிலையில்லா அரசியல் சவால்களை மஇகா இன்னும் வலுவாக எதிர்கொள்ள வேண்டும்!

கோலாலம்பூர், செப்.23-
நிலையில்லா அரசியல் சவால்களை மஇகா இன்னும் வலுவாக எதிர்கொள்ள வேண்டும் என டேசா பண்டான் மஇகா கிளைத் தலைவர் எம். செல்வேந்திரன் என்ற செல்வன் கூறினார்.

மஇகா நேற்று திடீரென முளைத்த கட்சி அல்ல. சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு இந்நாட்டின் இந்திய சமுதாயத்திற்காக உரிய சேவைகளை செய்து வரும் மகத்தான கட்சி.

மஇகா என்ன செய்தது என்று கேள்வி எழுப்பிய பல பேர் இன்று ஊமையாகி விட்டனர்.

இதற்கு ஆட்சியிலும் அரசாங்கத்திலும் மஇகா இருந்த போது செய்தததை இப்போது எந்த கட்சியினாலும் செய்ய முடியவில்லை.இதனை பலர் இப்போது தான் உணர்கின்றனர்.

ஆக எதிர்கால அரசியலில் மஇகா நிலையான இடத்தை பிடிக்க வேண்டும். அதற்கு கட்சியின் உள்ள அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை வலுப்பெற வேண்டும்.
குறிப்பாக இந்திய சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

அவ்வகையில் டேசா பண்டான் மஇகா கிளை கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோர் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு வழங்கும்.

அவர்கள் காட்டும் வழியில் பயணிக்கும் என்று செல்வேந்திரன் கூறினார்.

டேசா பாண்டான் மஇகா கிளையின் அமைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் இக்கூட்டத்திற்கு தலைமையேற்றார்.

இக்கூட்டத்தில் ஆர்.டி. சுந்தரம், அரசு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

0 Comments

leave a reply

Recent News