செரண்டா, செப்.23-
நம் சமுதாயம் நிலைத்திருக்க நமது மொழி, கலாச்சாரம், பண்பாட்டை நாம் காப்பது அவசியமாகும் என உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் தெரிவித்தார்.
தமிழ்மொழியை கற்பதனால் நமக்கு பல வகையில் நன்மை உண்டு. அதனை கற்க தவறியவர்களுக்குதான் அதன் அருமை புரியும் என அவர் சொன்னார்.
மேலும் நாம் குறிக்கோளை முன்வைத்து அதாவது நமது எதிர்கால ஆசையை உறுதி செய்து விட்டுதான் அதற்கான மேற்கல்வியை நாம் தொடர வேண்டுமென என அவர் எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழி தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நினைவுறுத்தினார்.
நம் வாழ்க்கையில் எந்த நிலைக்கு சென்றாலும் நம்முடையை பெற்றோர்களை போற்ற வேண்டியது நமது கடமையாகும். அவர்கள் நமக்காக செய்த தியாகங்களை நினைவில் வைத்து நாம் செயல்பட வேண்டுமென அவர் சொன்னார்.
இதற்கிடையில் இன்று அந்தாரா காப்பியிலுள்ள எஸ்பி கேர் தலைமையக மண்டபத்தில் எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழி எழுதவுள்ள மாணவர்களுக்கு பயிலரங்கு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சிலங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்மொழி பிரிவின் உதவி இயக்குநர் செங்குட்டுவன், உலு சிலாங்கூர் கவுன்சிலர் ப.புவனேஸ்வரன், எழுத்தாளர் சிவலெனின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
0 Comments