loader
தாய்மொழிக்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் உலு சிலாங்கூர் மாவட்ட இந்திய மாணவர்களுக்கான எஸ்பிஎம் தமிழ் மொழி பயிற்சி பட்டறை!

தாய்மொழிக்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் உலு சிலாங்கூர் மாவட்ட இந்திய மாணவர்களுக்கான எஸ்பிஎம் தமிழ் மொழி பயிற்சி பட்டறை!

செரண்டா, செப். 23-
உலுசிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த
107 இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு எஸ் பி.எம். தமிழ்மொழி பயிற்சி பட்டறை இன்று அந்தாரா காபி விஸ்மா எஸ்பி கேர் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்த பயிற்சி பட்டறை க்கான இடம் மற்றும் உணவு செலவுகளை உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையை சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ் மொழிப் பிரிவு உதவி இயக்குநர் செங்குட்டுவன் வீரன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிகரமாக நடத்தினர்.

உலு சிலாங்கூர் மாவட்ட தமிழ் மொழி  கற்றல் கற்பித்தல் குழு , உலு சிலாங்கூர் மாவட்ட கல்வி இலாகா ஆகியவற்றுடன் இணைந்து இந்த பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, கிராமத் தலைவர் முரளி, பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் சிவலெனின் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சிவலெனின் மலாயா கணபதி வாழ்வும் போராட்டாமும் புத்தகம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது.

0 Comments

leave a reply

Recent News