கோலாலம்பூர், செப்.20-
பொழுது போக்குகாக ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் பயணத்தை தொடர்ந்த ஷேடோபெக் மோட்டார் சைக்கிள் குழுவின் தோற்றுநர் டத்தோ ஆனந்த் இன்று அந்த பொழுது போக்கை சாதனையாக்கியதுடன் மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவில் நீண்ட தூரம் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மலேசியர் என்ற பெருமையையும் உலகின் உயர்ந்த எல்லையான உம்லிங் லா பாஸைக்கை ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் கடந்த முதலாவது மலேசியர் என்ற இரட்டைச் சாதனையை படித்தை மலேசிய சாதனை புத்தகத்தில் அவர் இடம் பிடித்தார்.
அதுபோன்ற கரடு முரடான பாதையில் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் கடக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டுவதற்காக அவர் இந்த சாதனையை மேற்கொண்டு இன்று சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.
அவரை பாராட்டும் வகையில் நேற்று தலைநகரிலுள்ள ரோட் 77 ஹார்லி டேவிட்சன் மையத்தில் விருந்து நிகழ்ச்சியுடன் கூடிய பாராட்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது. மலேசிய சாதனை புத்தக விருதை அவரிடம் அதிகாரிகள் வழங்கிச் சென்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கலந்து கொண்டார்.
0 Comments