கோலாலம்பூர் செப்- 12
கடந்த இரண்டு ஆண்டுகளாக. கருஞ்சட்டை இளைஞர் படை தந்தை பெரியார் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தினர்.
தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு தலைநகர் Chinese assembly hall மண்டபத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைப்பெறவுள்ளது.
இதற்கு முன் எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி இயங்கலை நிகழ்ச்சி நடைப்பெறவுள்ளது.
இரவு 8.30 மணிக்கு my periyaar முகநூல் அகப்பக்கத்தில் மலேசிய ,இலங்கை, அஸ்திரேலியா தமிழ் நாடு என பல பேச்சாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் தமிழக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி சிறப்புறை வழங்க இருக்கிறார்.
அதே நேரத்தில் 21 ஆம் திகதி சீன அசெம்பளி மண்டபத்தில் நடைப்பெறும் கருத்தரங்கு 2 பிரிவாக நடைப்பெறவுள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மலாய் அமர்வும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தமிழ் அமர்வு நடைப்பெறும் என ஏற்பாட்டாளர் நாகேன் தெரிவித்தார்.
கருஞ்சட்டை இளைஞர் படை குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திய பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு, இவ்வாண்டும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
தன்னார்வ ஆய்வாளர் சாமிநாதன், ஊடகவியலாளர் இளவெனில் மற்றும் களப் பணியாளர் - கவிஞர் கெளசல்யா ஆகியோர் இதில் உரையாற்றுவார் கள்.
திராவிட மற்றும் பெரியார் சிந்தனையின் தேவை மலேசிய சமுதாயத்தில் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்று ஏற்பாட்டுக் குழு தோழர் நாகேன் தெரிவித்தார்.
கருத்தரங்கில்
மலேசியர்களிடயே வலுத்துள்ள மத இன நல்லிணக்க பிரச்சனைகளை மாற்று சிந்தனையின் வழி எவ்வாறு கையாளலாம் என்று கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர்
தோழர் நாகேன் : 016-5910564
தோழர் யோகி : 016-5432572
தோழர் கௌசல்யா : 011-36321725 ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments