பெட்டாலிங் ஜெயா, செப்.9-
இசைத்துறையில் அதிலும் இந்திய இளைஞர்கள் மத்தியில் பல திறமையான DJ-க்கள் உள்ளனர். அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பீட் தலைவன் போட்டி நடைப்பெறவுள்ளது.
இந்த போட்டியை செந்தோசா சட்டமன்ற தொகுதி, அஜெண்டா சூரியா, ரியல் ஜோக்கி, திரினித்தி சொலுஷன் நிறுவனம், செஜாத்ரா செந்தோசா சிலாங்கூர் அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த போட்டியில் சுமார் 50 போட்டியாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெ.12 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் காத்து கொண்டிருக்கிறது.
இந்த போட்டிக்கான பதிவு நாளை 10ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி முடிவடையும். அதனை தொடர்ந்து இம்மாதம் 26ஆம் தேதி முதல் கட்ட தேர்வு நடைப்பெறும். அதனை தொடர்ந்து அடுத்த மாதம் 5ஆம் தேதி இப்போட்டிக்கான அரையிறுதி சுற்று நடைப்பெறும். அடுத்ததாக தீபாவளி கொண்டாட்டம் கலந்து இந்த போட்டியின் இறுதிச் சுற்று 15ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைப்பெறவுள்ளது.
இசைத்துறையில் இந்திய இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளையும் கூடுதல் வருமானத்தை பெற்றுத் தர இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
மேல் விவரங்களுக்கு 012-5803605 (மணி போய்), 017-3149462 (ஹார்டி பி) ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.
0 Comments