loader
மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும்  வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்!  -ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஓணம் பண்டிகை வாழ்த்து

மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும்  வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்! -ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஓணம் பண்டிகை வாழ்த்து

கோலாலம்பூர்,செப்.5-
தி்ருஓணம் பண்டிகையை  மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலேசிய மலையாளிகள் அனைவருக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்  தமது இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்த ஓணம் பண்டிகை நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாக, உறவுகளோடு இணைந்து  கொண்டாட வாழ்த்துவோம்.

ஓணம் பண்டிகையின் பின்னணியாக பல இதிகாசங்களும். புராணக் கதைகளும் இருந்தாலும்,  இத்திருநாளை கொண்டாடும் வகையில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று நம் முன்னோர்கள் ஏற்படுத்திய அத்தனை விஷயங்களும் நமது வாழ்வியலோடு இரண்டரக் கலந்தவை என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வீட்டைச் சுத்தம் செய்வது முதல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, புத்தாடை அணிவது, பெரியோரை வணங்குவது, ஆலயத்திற்குச் செல்வது  என ஒவ்வொரு செயலுக்கும் ஆழந்த அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாமும் தெரிந்து கொண்டு பிறருக்கும் புரியும்படி கொண்டாட வேண்டும். இந்த கொண்டாட்டத்தில் ஓணம் பெண் பண்டகை திருநாள் பெருமையையும் பிறர் உணரச் செய்வோம். 

மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன. வருடத்திற்கு ஒரு முறைதான் என ஆடம்பரம் இல்லாமல், சிக்கனமாகச் செலவு செய்வோம். பல இன மக்கள் வாழும் மலேசியாவில், அனைவரும் ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தோடு திருஓணம் பண்டிகையை கொண்டாடுவோம்என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பண்டிகைகள், கொண்டாட்டங்களின் தத்துவமே பண்பாடுகளைப் பேணிக்காத்து ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருப்பதே. இறைவழிபாடு பெரியோரை வணங்குதல் என ஒவ்வொரு செயலுக்கும் ஆழந்த அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாமும் தெரிந்து கொண்டு பிறருக்கும் புரியும்படி கொண்டாட வேண்டும். இந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில்  பெருமையையும் பிறர் உணரச் செய்வோம் என்று திருஓணம் பண்டிகை வாழ்த்து செய்தியில் டான்ஸ்ரீ  விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

leave a reply

Recent News