loader
ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள்! -டத்தோஸ்ரீ எம்.சரவணன்

ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள்! -டத்தோஸ்ரீ எம்.சரவணன்

கேரளாவின் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து மலையாள சமூகத்தினருக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள் என மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துக் கொண்டார்.

மலையாள மக்களின் அறுவடைத் திருவிழா என்றும் அழைக்கப்படும் ஓணம், மலேசியாவில் பெருமளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இயற்கை வளம், விவசாயம், உடல் உழைப்பு, வளமான வாழ்க்கைக்கு நன்றி செலுத்துதல், சமூக ஒற்றுமை என நல்ல எண்ணங்களையும், நலமிக்க செயல்களையும் சிறியோர் பெரியோரிடையே விதைக்கும் முக்கிய பங்காக ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் விளங்குகிறது.

வாசலில் கோலமிட்டு, வீட்டை அலங்கரித்து, விதவிதமாக உணவு சமைத்து நண்பர்கள், உறவினர்களை அழைத்து விருந்து வைத்து கொண்டாடப்படும் இந்த பண்டிகை மலேசியர்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் திருநாளாகவும் விளங்குகிறது என அவர் சொன்னார்.

குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணம் இது. வெவ்வேறு கலாச்சாரமும், பழக்க வழக்கமும் நம் வாழ்க்கையை இன்னும் வண்ணமயமாக்குகிறது என்றால் அது மிகையாகாது.

தொடர்ச்சியான கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியான தருணங்களும்  இருந்து கொண்டே இருக்கும்.

மீண்டும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்.
உங்கள் வாழ்க்கை அமைதியும், ஆனந்தமும் நிறைந்த வளமான வாழ்க்கையாக இருக்க மனமார்ந்த வாழ்த்துகள் என டத்தோஸ்ரீ சரவணன் அவரின் வாழ்த்து அறிக்கையில் கூறியிருந்தார்.

0 Comments

leave a reply

Recent News