68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பினாங்கு மாநில ம.இ.கா இளைஞர் பிரிவினர் நான்கு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினர் என ம.இ.கா பினாங்கு இளைஞர் பிரிவு தலைவர் ரூபராஜ் தாமோதிரன் தெரிவித்தார்.
மேஃபிஸ்ட் தோட்ட தமிழ்ப்பள்ளி, மலாக்கோஃப் தோட்ட தமிழ்ப்பள்ளிகளில் ரூபராஜ் தாமோதிரன் பள்ளி வாளகத்தை ஜோடித்து கொடுத்தது மட்டும் அல்லாமல் அங்குள்ள மாணவர்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி அவர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
பினாங்கு மாநில இளைஞர் பிரிவு துணைத் தலைவர் ருக்குமாறன் பாயான் லேபாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கொடிகளை வழங்கி அவர்களுடன் கொண்டாடினார்.
அதே நேரத்தில் பினாங்கு மாநில ம.இ.கா இளைஞர் பிரிவு செயலாளர்
மகாதேவன் பழனியாண்டி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கி அவர்களுடன் கொண்டாடினார்.
தேசப்பற்றை வளர்ப்பது நமது கடமை. நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிரை விட்ட நமது முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அடுத்த தலைமுறைக்கு அதனை நாம் கொண்டு சேர்க்க வேண்டும் என ரூபராஜ் தெரிவித்தார்.
0 Comments