loader
தமிழ் மொழியில் கொள்கை ரீதியில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த " தமிழ் கல்வி மாநாடு " -சுரேன் காந்தா

தமிழ் மொழியில் கொள்கை ரீதியில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த " தமிழ் கல்வி மாநாடு " -சுரேன் காந்தா

கோலாலம்பூர்,  ஆக.28-
மலேசியாவில் தமிழ் கல்வியின் முன்னேற்றம்,  மற்றும் இடைநிலைப்பள்ளியில் அதிகமான மாணவர்கள் தமிழ் மொழியை  பாடத்திட்டமாக எடுக்க ஒரு கொள்கை ரிதீயான மாற்றம் அவசியம் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் காந்தா  தெரிவித்தார்.

கடந்த ஆண்டு  எஸ்.பி.எம் தேர்வில் சுமார் 29.6% விழுக்காடு  மாணவர்கள் ஏ பெற்ற நிலையில், 63 விழுக்காடு மாணவர்கள் ஏ பெறவில்லை. அதோடு 6 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது நிதிர்சன உண்மை.

தமிழ் மொழியில் ஏ பெரும் மாணவர்களின் தேர்ச்சியை 80 விழுக்காட உயர்த்தும் நோக்கத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மலேசிய தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம், தமிழ் சார்ந்த கல்வி மான்களுடன் இப்போது ஒரு குழுவை உருவாக்கி 3 திட்டத்தை வகுத்து உள்ளது.

முதல் திட்டமாக இந்த ஆண்டு எஸ்.பி.எம் - எஸ்.டி.பி.எம் தேர்வில் தமிழ் மொழியை தேர்ச்சி பாடமாக எடுத்துள்ள மாணவர்களுக்கு ஒரு சிறப்பு கருத்தரங்கை அக்டோபர் 5 திகதி மலாயா பல்கலைக்கழக மண்டபத்தில் ஏற்பாடு செய்ய உள்ளது.

இதில் மாணவர்களுக்கு பாடம் தொடர்பான சில நுணுக்கம்,  சில வழிகாட்டு முறையை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி  தமிழ்ப்பள்ளி படித்து இடைநிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சுமார் 60 விழுக்காடு மாணவர்கள் தான் எஸ்.பி.எம் தேர்வில் தமிழ்ப் பாடத்தை தேர்வு பாடமாக எடுக்கின்றனர். 40 விழுக்காடு மாணவர்கள் அதனை தவிர்த்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளது. அது ஆராய பட்டு அதற்கும் கொள்கை ரீதியான  தீர்வை எடுக்க இந்த குழு முயற்சி எடுக்கவுள்ளது.

மாணவர்களின் கட்டுரை எழுதும் தரத்தை மேம்படுத்த 2ஆவது திட்டமாக தேசிய ரீதியில் கட்டுரை எழுதும் போட்டி  மலேசிய  தமிழ் எழுத்தாளர்  சங்கத்தின் ஆதரவோடு வரும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை நடத்தப்படும் என்றார் சுரேன்.

இந்த போட்டி மூன்று பிரிவாக வகுக்கப்பட்ட நிலையில் 4,5,6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி ஒரு பிரிவும், படிவம் 1,2,3 மாணவர்களுக்கான போட்டி ஒரு பிரிவும், படிவம் 4,5,6 மாணவர்களுக்கான போட்டி  என மூன்று பிரிவாக நடத்தப்படும் என்றார்.

மிக முக்கியமான மூன்றாவது திட்டம் இது வரை நாட்டிலும் உலக ரீதியிலும் யாரும் செய்யாத ஒரு மாநாடாக அமைய போகிறது.
உலக ரீதியில் உள்ள தமிழ் கல்விமான்களை கொண்டு  மிகபெரிய தமிழ் கல்வி மாநாடு நடத்தப்படவுள்ளது.

தமிழ் கல்வி, அதன் முன்னேற்றம் மற்றும் மாற்றங்கள் தொடர்பான மாநாடாக இது அமையும். மலேசிய கல்வி முறையில் தமிழ் மொழி முன்னேற்றம் அடைந்து,  மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கொள்கை ரீதியான மாற்றம் அவசியம். கல்வி அமைச்சு சார்ந்த அதிகாரிகள் உட்பட கல்வி அமைச்சரையும் இந்த மாநாட்டிற்கு அழைத்து, விளக்கம் கொடுத்து, கொள்கை ரீதியான  மாற்றங்கள் தொடர்பான திட்டங்களும் அதன் மூலமாக நிகழப்போகும் மாற்றங்கள் தொடர்பாக விளக்கமும் கொடுக்க உள்ளோம். இப்போது உள்ள சூழலில் தமிழ் மொழி பாடத்திற்கு கொள்கை ரீதியான மாற்றம் அவசியம்.  அந்த மாற்றத்தின் அரங்கமாக அந்த மாநாடு அமையும். அதற்காக  தமிழ் சார்ந்த அனைத்து  இயக்கமும் கைகோர்த்து ஒற்றுமையாக இந்த முயற்சியை முன் எடுத்துள்ளோம் என  சுரேன் காந்தா தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News