கோலாலம்பூர், ஆக.27-
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று புடு, கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது தொடர்ந்து பக்தர்கள் அதிகமாக வர தொடங்கினர்.
அதனை தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் நின்று பிள்ளையாரை வணக்கிச் சென்றனர்.
இதற்கிடையில் ஆலயத்திற்கு வந்த பக்தர்களின் பசியை ஆற்றும் வகையில் தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் அன்னதானத்தை வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்தி அன்று கோர்ட்மலை பிள்ளையார் ஆலயத்தில் அன்னதானத்தை வழங்குவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இம்முறை 5,000 பக்தர்களுக்கு அன்னதானம் தயார் செய்யப்பட்டு பரிமாரப்பட்டது.
இன்று காலை நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் புக்கிட் அமான் குற்றவியல் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ குமார், இந்திய உலோகம் மறுசுழற்ச்சி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் முத்தப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை ஆலயத்தின் ரதம் ஊர்வலம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
0 Comments