கோலாலம்பூர், ஆக.25-
பாலஸ்தீன மக்களுக்கு, குறிப்பாக காசாவில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு கூடுதலாக வெ.100 மில்லியன் மானியத்தை அறிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் அறிவித்த வெ.100 மில்லியன் நிதிக்கு கூடுதலாக இந்த ஒதுக்கீடு இருப்பதாக அன்வார் கூறினார்.
தான் எங்கு சென்றாலும் பாலஸ்தீன சகோதரர்களை ஒருபோதும் விட்டுச் செல்ல மாட்டேன். அவர்களுக்கு உதவுவேன் என அவர் மேடையில் கூறினார்.
மடானி அரசாங்கத்தின் சார்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெ.100 மில்லியன் நிதியை அரசு அங்கீகரித்தது.
நிதியின் தொடக்கமாக மலேசிய அரசாங்கம் வெ.100 மில்லியனை வழங்கும் என்று நேற்றிரவு அவர் டத்தாரான் மெர்டேகாவில் நடந்த மலேசியாகு பெர்சாமா காசா ஒன்றுகூடல் மற்றும் பிரார்த்தனையில் கூறினார்.
மேலும் நாட்டிலுள்ள கோப்ராட் நிறுவனங்களும் காசா மக்களுக்கு உதவ முன்வர வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
0 Comments