கோலாலம்பூர், ஆக.23-
செந்தூலிலுள்ள தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியின் 81ஆம் ஆண்டு பள்ளிப் போட்டி விளையாட்டு இன்று நடைப்பெற்றது.
இந்த போட்டியில் சிவப்பு, நீலம், பச்சை என மூன்று அணிகளில் மாணவர்கள் இடம் பெற்று போட்டி விளையாட்டுகளில் கலந்து கொண்டனர்.
இம்முறை விளையாட்டு போட்டியின் இல்லங்கள் பழங்களை அடிப்படையாக கொண்டு அலங்காரம் செய்யப்பட்டதுடன் மாணவர்களும் கண்கவரும் வண்ணங்களில் உடை அணிந்து அணிவகுத்து சென்றனர்.
ஆரோக்கியமாக வாழ பழங்களை உண்பது அவசியம் எனும் கருப்பொருளில் சிவப்பு இல்லம் ஸ்ட்ராபெர்ரி பழத்தையும் நீல இல்லம் புலுபெர்ரி பழத்தையும் பச்சை இல்லம் அவகாடோ பழத்தையும் முன்னிரித்தி அலங்காரங்களை செய்திருந்தனர்.
மேலும் பள்ளியின் பாலர்ப்பள்ளி மாணவர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.
பள்ளிகளில் நடக்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட அதில் பெற்றோர்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே அது வெற்றிப்பெறும். மேலும் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தவும் அவர்கள் ஆரோக்கியமாக வாழ இதுபோன்ற போட்டி விளையாட்டுகள் நடத்தப்படுவதாக பள்ளியின் தலைமையாசிரியர் திரேசா அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
0 Comments