பெட்டலிங் ஜெயா, ஆக.21-
உலகமே டிஜிட்டல் உலக நோக்கி பயணிக்கும்போதும் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அதிலிருந்து பின் தங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிஜேஎஸ்1 தமிழ்ப்பள்ளிக்கு டத்தோ டி.மோகன் ஸ்மார்ட் டிஜிட்டல் பலகையை அன்பளிப்பாக வழங்கினார்.
நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் காலத்தில் கட்டப்பட்ட 6 புதிய தமிழ்ப்பள்ளிகளில் இந்த பள்ளியும் ஒன்றாகும். அந்த வகையில் அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக டத்தோ டி.மோகன் கூறினார்.
இந்த பள்ளிக்கு மேலும் 6 வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் டிஜிட்டல் பலகைகள் தேவைப்படுகிறது. ஆகையால் நல்லுள்ளங்கள் இந்த தமிழ்ப்பள்ளிக்கு உதவ முன்வர வேண்டுமென அவர் கூறினார்.
டிஜிட்டல் உலகில் நாம் பயணிக்கும் நிலையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு இதுபோன்ற உதவிகளை மித்ரா (இந்தியர் உறுமாற்றம் திட்டம்) வழி செய்யலாமே என்ற கேள்விக்கு, இதனை முழுமையாக வரவேற்பதாக அவர் கூறியதுடன் பயன்படுத்தி முடிக்க முடியாத மித்ரா மானியங்கள் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என அவர் வலியுறுத்தினார்.
வரும் காலங்களில் டிஜிட்டல் முறையில்தான் கற்றல் கற்பித்தல் முறை நடத்தப்படும். புத்தகங்களின் பயன்பாடு குறைந்து விடும். ஆகையால் நம் மாணவர்கள் இந்த வளர்ச்சியில் ஒருபோதும் பின் தங்கிவிடக் கூடாது.
மேலும் இந்த பள்ளியில் அனைத்து அடிப்படை தேவைகள் செய்து தரப்பட்டுள்ளது. இருந்தபோதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது. ஆகையால் சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் நம் பிள்ளைகளை இந்த தமிழ்ப்பள்ளியில் சேர்க்கும்படியும் தமிழ்ப்பள்ளிகளுக்கு பெற்றோர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் டத்தோ டி.மோகன் கேட்டுக் கொண்டார்.
0 Comments