சிரம்பான் ஆகஸ்ட் - 17
இன்று நடைபெற்ற நெகரி செம்பிலான் மாநில ம.இ.கா மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன்
எதிரிகளின் கூச்சலை விட உறுப்பினர்களின் மவுனமே ஆபத்தானது என தெரிவித்தார்.
ஆறுவது ஆண்டு காலம் ம.இ.கா என்ன செய்தது என நண்டு சிண்டு எல்லாம் பேசுகிறார்கள். "கிளை தொகுதி மாநில தலைவர்களே" ! குறை சொன்னவர்கள் இன்று தான் மத்திய அரசாங்கத்தில் உள்ளனர் ,அதோடு 2008-க்கு பிறகு தான் சிலாங்கூர் மற்றும் பினாங்கில் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தனர்.
இனி தொகுதி மாநில ரீதியில் பட்டியலை எடுங்கள் எடுத்து போடுங்கள்
ம .இ.கா என்ன என்ன செய்தது என்பதை பார்கட்டும் சமுதாயம்.
எதிரிகளின் கூச்சலை விட உறுப்பினர்களின் மவுனமே ஆபத்தானது ! ஆகையால் இனியும் மவுனம் வேண்டாம் பட்டியலை போடுங்கள் என்றார்.
தோட்ட புரத்தில் இருந்து வெளியே வந்த இந்தியர்களுக்கு கைகொடுக்க TAFE கல்லூரி அதன் வாயிலாக வேலை வாய்ப்பு , மருத்துவத்திற்காக AIMST பல்கலைக்கழகம் அதன் மூலம் வேலை வாய்ப்பு, வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வி கடன் உதவி , அதன் வாயிலாக உருவான பட்டதாரிகள் பல்லாயிரம்.
அதுமட்டுமா! ஆலயம், தமிழ் பள்ளி சீரமைப்பு ,மாணவர்களுக்கு கல்வி உதவி, இந்தியர்களுக்கு சமூகநல உதவி , என வட்டார ரீதியில் ம.இ.கா செய்ததை பட்டியல் எடுங்கள் என்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்.
இதுவரை 240 மில்லியன் கல்வி கடன் உதவி செய்த நாங்களா திருடர்கள் ? ஒன்றுமே செய்யாமல் குறையை மட்டும் சொல்லி ஆட்சிக்கு வந்த இவர்களை பட்டியல் போட சொல்லுங்கள் என்றார் சரவணன்.
இது ம.இ.காவின் 40 ஆண்டு கால கல்வி புரட்சி !
இனியும் மவுனம் வேண்டாம்,
எதிரிகளின் கூச்சலை விட உறுப்பினர்களின் மவுனமே ஆபத்தானது !
அவர்களின் வாயை அடைக்கும் வகையில் பட்டியலை திரட்டுங்கள் என்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்.
செய்தி ; வெற்றி விக்டர்/ காளிதாசன் இளங்கோவன்
0 Comments