கோலாலம்பூர், ஆக.11-
தமிழகத்திலிருந்து புத்தகங்களை தருவித்து இங்கு விற்பனை செய்து வரும் முதன்மை நிறுவனமான ஜெயபக்தி நிறுவனம், தற்போது மும்மொழியில் திருக்குறள் நூலை வெளியீடு செய்யவுள்ளது.
இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயபக்தி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக இந்த முயற்சியை முன்னெடுத்து தற்போது மும்மொழியில் திருக்குறள் நூலை வெளியிடவுள்ளது.
இந்த புத்தகம் முழு வண்ணத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதான் நாட்டில் முதல் மும்மொழி திருக்குறள் நூல் இதுவாகும் என்றும் இந்த நூல் அறிமுக விழா கூடிய விரைவில் நடத்தப்படும் என்றும் ஜெயபக்தி நிறுவனத்தின் தோற்றுநர் கு.செல்வராஜூ தெரிவித்தார்.
இந்த புத்தகத்தில் திருக்குறள் தமிழ், ஆங்கிலம், மலாய் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மூன்று மொழிகளில் தனித் தனி நூல்கள் வெளியிடப்படவுள்ளது.
ஆகையால் வாழ்வியலை நமக்கு சொல்லித் தரும் இந்த அருமையான புத்தகம் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.
இதற்கிடையில், நாட்டில் பல சிறு வணிகர்கள் புத்தக விற்பனையை செய்து வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து புத்தகங்களை தருவிப்பதில் அவர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு உதவியாகவும் உறுதுணையாக இருக்கும் பட்சத்தில் அடுத்த மாதம் முதல் ஜெயபக்தியில் மொத்த விற்பனையில் புத்தகங்கள் விற்கப்படவுள்ளதாகவும் டத்தோ கு.செல்வராஜூ தெரிவித்தார்.
மேலும் ஆடி மாத இறுதி வெள்ளியான இம்மாதம் 15ஆம் தேதி ஜாலான் ஈப்போ, ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் 108 சங்காபிஷேகமும் சண்முகார்ச்சனையும் நடைப்பெறவுள்ளதால் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
0 Comments