ஷா ஆலம், ஆக.10-
இளம் சாதனையாளர்களை கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோல்டன் எம்பாயர் மீடியா ஏற்பாட்டில் 60 இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இளம் சாதனையாளர்களுக்கு ஊக்குவிப்பு அளிக்கும் வகையில் இந்த விருது விழாவை ஏற்பாடு செய்ததாக கோல்டன் எம்பாயர் மீடியா நிறுவனத்தின் தோற்றுநர் மகேந்திரன் தெரிவித்தார்.
இந்த விருது விழாவில் கல்வி, விளையாட்டு, கலைத் துறைகளில் சாதனைப்படைத்த இளம் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருது விழாவிற்கு பல நல்லுள்ளங்கள் பலர் தனக்கு உதவி கரம் நீட்டியதாகவும் விருது பெற்ற பிள்ளைகளின் பெற்றோரும் முழு ஆதரவு வழங்கியதாக மகேந்திரன் தெரிவித்தார்.
இளம் வயதில் சாதனை படைத்துள்ள இந்த சிறுவர்களை தொடர்ந்து நாம் அங்கீகரிக்க வேண்டும். இந்த அங்கீகாரம் அவர்களை எதிர்காலத்திலும் பல சாதனைகளை புரிய வழிவகுக்கும் என அவர் சொன்னார்.
இந்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் இதற்கு முன்பு பெண்களை கௌரவிக்கும் வகையில் சாதனை பெண்கள் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டத்தோ சூரியா பிரகாஷ் கோல்டன் எம்பாயர் மீடியா செண். பெர்ஹாட் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
0 Comments