கோலாலம்பூர், ஆக. 9-
மித்ரா சினார் சஹாயா உதவி திட்டத்தின் கீழ் கஷ்டப்படும் 793 இந்திய குடும்பங்களுக்கு மித்ராவின் கீழ் வெ.1,139,730 உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக மித்ரா சிறப்புக் குழுத் தலைவர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.
கஷ்டப்படும் மற்றும் பேறு குறைந்த மக்களுக்கு உதவும் வகையில் இந்த சினார் சஹாயா உதவி நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று ஸ்தாப்பாக், ஆயர் பானாஸ், ஸ்ரீ இந்தான் பைடூரி, ஸ்ரீ கூச்சிங், பத்து ஆகிய பகுதிகளிலுள்ள 8 குடும்பங்களை பிரபாகரன் நேரடியாக சந்தித்து உதவித் தொகையை வழங்கினார்.
ஏழ்மை நிலையுள்ள மக்கள் இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கு மாதம் 500 வெள்ளி வீதம் மூன்று மாதங்களுக்கு 1,500 வெள்ளி வழங்கப்படும்.
மித்ரா விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதற்கான விளக்கத்தை நான் நாடாளுமன்ற தொடரில் தெரிவித்து விட்டேன். ஆகையால் இந்த சர்ச்சைகளை பெரிது படுத்த வில்லை.
மேலும் மித்ராவின் கீழ் உதவிகள் முறையாக தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றால் அதன் திட்டங்களை வகுத்த தலைமைத்துவம் தொடர்ச்சியாக இருப்பது அவசியம். அவ்வப்போது மாற்றங்கள் வந்தால் வகுக்கப்பட்ட திட்டங்கள் வெற்றியடையாது. ஒரு கப்பலின் கேப்டன் தேவையில்லாமல் மாற்றப்பட்டு கொண்டுருந்தால் அந்த கப்பல் அதன் எல்லையை அடைய முடியாது என அவர் சொன்னார்.
0 Comments