சுங்கை பட்டாணி, ஆக 7-
எதிர்கால விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதற்கும் உயிரி தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஏம்ஸ்ட் பல்கலைக்கழக அறிவியல் புலமும் எம்.ஆர்.எஸ் கல்வி நிலையமும் இணைந்து வழங்கிய ஸ்தெம் பட்டறை (ஏம்ஸ்ட் பயோஸ்பார்க்) கடந்த ஜூலை 19 ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பட்டறையில் சுமார் 50க்கும் மேற்பட்ட படிவம் 4, படிவம் 5 மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வலுவான கல்வி போதனைகளும் அதிநவீன வசதிகளுடன், மாணவர்கள் நேரடி அனுபவத்தையும் உயிரி தொழில்நுட்பம், தொடர்புடைய அறிவியல் துறைகளில் நுண்ணறிவையும் பெற ஒரு சிறந்த சூழலை வழங்கியது.
ஸ்தெம் பட்டறை, நடைமுறை நடவடிக்கைகள், தொடர்புடைய ஆய்வகங்கள்,
ஆராய்ச்சியாளர்களின் செயல்விளக்கங்கள், மாணவர்கள் கேள்விகளைக் கேட்கவும் உயிரி தொழில்நுட்பத்தில் தொழில் பாதைகளை ஆராயும் வாய்ப்புகள் அனைத்தும் வழங்கப்பட்டன.
ஏம்ஸ்ட் பல்கலைக்கழக அறிவியல் புல பேராசிரியர் டாக்டர் லீ சு யின் கூறுகையில், இந்தப் பட்டறை மாணவர்களுக்கு ஸ்தெம் கல்வி எதிர்காலத்திற்கு என்பதை எடுத்து கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நவீன காலத்திற்கும் வளர்ந்து வரும் உயிரி தொழில்நுட்பம் மூலம் உள்ள வேலை வாய்ப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உயிரி தொழில்நுட்ப புலத்தில் மாணவர்கள் மேற்படிப்பு படிக்க இங்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இந்தப் பட்டறையில் கலந்து கொண்டு ஆய்வுகளை மட்டும் பார்த்து தெரிந்து கொண்டு போகாமல், இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஸ்தெம் பட்டறையில் கலந்து கொண்ட எம்.ஆர்.எஸ் கல்வி நிலைய மாணவர்கள் கூறுகையில், இது மிகவும் பயனுள்ளதாகவும் நிறைய கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தனர். அதோடு, இதன் மூலம் ஸ்தெம் எதிர்காலத்தில் பல வேலை வாய்ப்புகளை வழங்கும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
0 Comments