loader
ஒரு இளைஞரின் கனவுக்கு  கை கொடுக்கும் வகையில் 3 மணி நேரத்தில் ம.இ.கா உதவியது !  தினேஷ் ஸ்ரீதரனுக்கு 15 ஆயிரம் வெள்ளி வழங்கினார் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்

ஒரு இளைஞரின் கனவுக்கு கை கொடுக்கும் வகையில் 3 மணி நேரத்தில் ம.இ.கா உதவியது ! தினேஷ் ஸ்ரீதரனுக்கு 15 ஆயிரம் வெள்ளி வழங்கினார் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், ஆக 6-

மலேசிய புகைப்படக் கலைஞர் தினேஷ் ஸ்ரீதரனின் லட்சிய கனவுக்கு தோல் கொடுக்கும் வகையில்  மஇகா 15 ஆயிரம்  வெள்ளி நிதி வழங்கி பேருதவி செய்துள்ளது.

கென்யாவின் மசாய் மாறா தேசியக் காடுகளில் உள்ள உயிரியல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உலகப் புகழ்பெற்ற National Geographic Societyயுடன் கைகோர்த்து  அவர் செய்யபோகும்  புகைப்பட அவன பணிக்காக  மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்  இந்த விதியை வழங்கினார்.

இந்த  பயணத்திற்கான முன் ஏற்பாடு சவால்கள் அவருக்கு இருந்தபோதும் மஇகா வழங்கிய நிதி  உதவியுடன் தினேஷ் இந்த வார இறுதியில் கொன்யாவுக்கு பயணமாக உள்ளார். அவரின் திட்டமான ‘Echoes of the Savannah’ எனும் புகைப்படக்  அவன முயற்சியை அங்கு சென்று துவங்க உள்ளார்.

அன்மையில்  வெளியிட்டப்பட்ட செய்தியின் அடிப்படையில் செனட்டர் டத்தோ சி. சிவராஜா அவர்கள், இன்று மதியம் மஇகாவின்  தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் கவனத்துக்குக் இந்த விவகாரத்தை  கொண்டு சென்றார்.

அதன் பின்  வெறும் 3 மணி நேரத்திற்குள் மஇகா விரைவான நடவடிக்கை எடுத்து, இந்த நிதியுதவியை அவருக்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

இது நம் சமுதாயத்திற்கு பெருமைக்குரிய தருணம். மலேசிய இளைஞர்களின் உறுதி மற்றும் கனவுகளை உணர்த்தும் பயணம் இது. உலகரங்கில் மலேசியாவின் புகைப்பட கலையை வெளிப்படுத்த தினேஷுக்கு மஇகாவின் சார்பில் வழங்கும் ஆதரவு இது என நிதிக்கான காசோலை வழங்கும் போது டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

0 Comments

leave a reply

Recent News