பத்துமலை, ஆகஸ்ட் 3
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், பரந்த வெளிச் சிந்தனைக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில், ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில் 31ஆவது சிறப்பு கல்வி யாத்திரை இன்று காலை பத்துமலை திருத்தலத்தில் பக்தியுடன் தொடங்கியது.
இந்த அறிவுப் பயணம் மூலம் மாணவர்கள் நூற்பயிற்சிக்கு அப்பால், நடைமுறை அறிவு, பாரம்பரிய வரலாற்று விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் மீதான பொறுப்பு, மற்றும் குழு ஒற்றுமை ஆகிய பல்வேறு வாழ்க்கைத் திறன்களையும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை பெறுகின்றனர்.
பத்துமலை ஸ்ரீ முருகன் கோயிலின் புனித சூழலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கல்வி யாத்திரை, அதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறந்த ஊக்குவிப்பையும் சக்தியையும் வழங்கும் வகையில் அமைகிறது.
இவ்வகை கல்வி யாத்திரைகள் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும், சமூக விழிப்புணர்வுக்கும் தூண்டுகோலாக இருக்கும் என்பது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் நம்பிக்கையாக திகழ்கிறது. பக்தி நியானத்துடன் பத்துமலை முருகனை காண பயணத்தை தொடங்கினார்கள் மாணவர்கள்.
-காளிதாசன் இளங்கோவன்
0 Comments