சுங்கை சிப்புட், ஆக.2-
எடுத்ததற்கெல்லாம் 60 ஆண்டுகளாக மஇகா என்ன செய்தது என்று பேசி பேசி இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் இந்திய பிரநிதிகள் தற்போதும் என்னதான் செய்கிறார்கள் என்பது இன்று அனைவருக்கும் புரியும்.
மஇகாவை குறைக்கூறிய ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அவர்கள் நாற்காலிகளை சூடேற்றி அமர்ந்துகொண்டுதான் இருக்கிறார்களே தவிர சமுதாயத்திற்காக எதுவும் செய்த பாடில்லை என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மஇகாவை குறை சொல்வதற்காகவே மைக்கா ஹோல்டிங்ஸை பற்றி பேசுவார்கள். ஆனால் மைக்கா ஹோல்டிங்ஸை மஇகா நிர்வாகம் செய்யவில்லை என்பதை அவர்கள் புரிந்து பேசுவதில்லை.
மேலும் குறைகளை பற்றி பேசுபவர்களுக்கு மஇகாவின் நிறையை பற்றி பேச நேரம் இல்லாமல் போய்விட்டது. வெ.480 மில்லியன் கடனில் இருந்த ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் கடன் கட்டி முடிக்கப்பட்டது பற்றி பேச ஆளில்லை என அவர் சொன்னார்.
இன்றை நிலையில் நாட்டில் ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், நமது உரிமைகள் அனைத்தும் சுயம்பு லிங்கம் போல் சொந்தமாக கிடைத்து அல்ல. இவற்றை பெற்று தந்தது மஇகாதான். இப்பொழுது நமது மொழி, ஆலயம், பள்ளிகளுக்கு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் மஇகாதான்.
அதனால் அரசியல் ஓட்டத்தில் மஇகாவை எப்படி வலுப்பெற செய்வது என்பது எங்களுக்கு தெரியும். மக்கள் விழித்து கொண்டனர். ஆகையால் இந்தியர்களின் எதிர்காலத்திற்காக எந்தவொரு கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த மஇகா தாயாராக உள்ளதாக சுங்கை சிப்புட் துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் நடைப்பெற்ற பேரா மாநில மஇகாவின் 79 பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
0 Comments