சுங்கை சிப்புட், ஆக.2-
நம் நாட்டிலுள்ள இந்தியர்களின் நலன் காக்கவும் குரல் கொடுக்கவும் உள்ள ஒரே கட்சி மஇகாதான். அதனை தவிர வேறு கட்சி இல்லை. புதிதாக பிறக்கவும் முடியாது என பேரா மாநில மஇகா தலைவர் டான்ஸ்ரீ ராமசாமி தெரிவித்தார்.
நமது சமுதாயம், சமயம், மொழி, தமிப்பள்ளிகள், ஆலயங்கள் ஆகியவற்றை காக்கும் தார்மிக பொறுப்பை மஇகா கொண்டுள்ளது. அதனை இதுவரை முறையாக செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.
ஆலய பிரச்சினைகள் என்றாலும் இனம் சம்பந்தமான பிரச்சினை என்றாலும் முதல் குரல் கொடுப்பது மஇகாதான். அதனால்தான் மஇகா இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் தாய்க்கட்சியாக விளங்கி வருவதாக சுங்கை சிப்புட்டிலுள்ள துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் நடைப்பெற்ற பேரா மாநில மஇகாவின் 79ஆவது பேராளர் மாநாட்டில் பேசியபோது அவர் சொன்னார்.
மேலும் மஇகாவை மேலும் வலுப்பெற செய்ய கட்சியில் அதிகமான இளைஞர்களை கொண்டு வரவேண்டும். அடுத்த பொதுத் தேர்தலை சந்திக்கும் முன் நம் கட்சியில் அதிக வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்திய சமுதாயத்தின் உறுமாற்றத்திற்கு கல்வி மிகவும் அவசியம். அந்த வகையில் மஇகா ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை டேவ் தொழில்நுட்ப கல்லூரியையும் உறுவாக்கியது. இந்த இரு உயர்க்கல்விக் கூடங்களில் கீழ் பல மாணவர்களுக்கு கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் அவர் எடுத்துச் சொன்னார்.
இதற்கிடையில் தேசிய மஇகா உருவாக்கும் சமூகநல திட்டங்களுக்கு பேரா மாநில மஇகா உறுதுணையாக இருக்கும் என அவர் சொன்னார்.
பேரா மாநில 79ஆவது பேராளர் மாநாட்டை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்தார்.
0 Comments